புதுடெல்லி:
கடந்த ஜுன் மாதத்தில் அனைத்து நிறுவனங்களின் கார் விற்பனை சரிந்துள்ளது.
முக்கிய கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சூசுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் டொயட்டோ கார்களின் விற்பனை சரிந்துள்ளது.
மகேந்திரா அண்ட் மகேந்திரா கார் விற்பனை மட்டும் கடந்த மாத்தில் 4% அதிகரித்துள்ளது.
முன்னணி நிறுவனமான மாருதி சூசுகி தரப்பில் கூறும்போது,கடந்த ஆண்டு ஜுன் மாதம் 1,35,662 கார்கள் விற்பனையாகின. இந்த மாதம் ஜுன் நிலவரப்படி 1,14,861 கார்கள் விற்பனையாகியுள்ளன.
15% விற்பனை கடந்த ஜூன் மாதத்தில் சரிந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆல்டோ மற்றும் பழைய வேகனார் கார்களின் விற்பனை கடந்த ஆண்டைவிட 36.2% வீழ்ச்சியடைந்துள்ளது.
புதிய வேகனார்ஆர், செலரியோ,இக்னிஸ்ல ஸ்விப்ட், பலேனோ மற்றும் டிசைர் கார்கள் கடந்த ஜுன் மாதம் 71,570 விற்பனையாகின.
இந்த ஆண்டு 62,892 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த கார்களின் எண்ணிக்கை 12.1% குறைந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனை கடந்த ஆண்டை விட, 7.9% குறைந்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட மகேந்திரா அன்ட் மகேந்திரா கார்கள் விற்பனை கடந்த ஆண்டை விட 4% குறைந்துள்ளது.
மாருதி சூசுகி நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஹுண்டாய் கார்களின் விற்பனை, கடந்த ஆண்டைவிட 7.3% சரிந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் கார் விற்பனை கடந்த ஆண்டை விட, 27% குறைந்துள்ளது.
நிலையற்ற பொருளாதாரம், நிச்சயமற்ற மழை, அதிகபட்ச வட்டி, பிஎஸ்-4 அறிமுகம் ஆகியவற்றால் கார்களின் விற்பனை குறைந்துள்ளதாக டொயட்டோ கிர்லாஸ்கர் மோட்டார் நிறுவன துணை நிர்வாக இயக்குனர் என் ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிலை விரைவில் மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.