சென்னை
கடந்த ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடந்த பருவத் தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அண்ணா பலகலைக் கழகத்தின் கீழ் 505 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் அக்டோபர் அல்லது நவம்பரில் ஒரு பருவத் தேர்வும் அதை அடுத்து ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஒரு பருவத் தேர்வும் நடைபெறுகிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த பருவத்தேர்வுகளில் இந்த கல்லூரிகளின் தேர்ச்சி விகிதங்களை இந்த பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்- மே பருவத் தேர்வுகளில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் 90% தேர்ச்சியுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்த தேர்வுகளில் 77 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 30%க்கு குறைவாக உள்ளன. இந்த 77 கல்லூரிகளில் 8 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 10%க்கும் குறைவாக உள்ளது.
அக்டோபர்-நவம்பர் மாத பருவத் தேர்வுகளில் கோவை பி எஸ் ஜி கல்லூரி 86.7% தேர்ச்சி விகிதம் பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்த தேர்வுகளில் 247 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 30%க்கு கீழ் உள்ளது. இந்த 247 கல்லூரிகளில் 65 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் 10%க்கும் குறைவாக உள்ளது. இதில் 3 கல்லூரிகளில் 1% கூட தேர்ச்சி விகிதம் இல்லை என்பது கவலைக்குறிய தகவல் ஆகும்