நடிகை பார்வதி ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020’ குறித்த தனது ஆட்சேபனைகளை கடிதத்தில் குறிப்பிட்டு, அதனை உடனே திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மார்ச் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வரைவு இஐஏ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதுகுறித்து ஆகஸ்ட் 11 வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வழங்கலாம் என குறிப்பிட்டிருந்தது.
இதுகுறித்து பார்வதி மத்திய அரசுக்கு எழுதியுள்ளார் . அதில் அறிவிப்பில் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் உள்ளது . பொதுமக்களின் கருத்துகளை வரவேற்பதாக கூறிவிட்டு, பெரும்பாலானவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாத இரண்டே மொழிகளில் மட்டும் வரைவு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறீர்கள். இந்த கொரோனா காலத்தில் தாங்கள் வாழ்வது பற்றியே கேள்விக்குறியாக இருக்கும்போது இதில் கவனம் செலுத்தமுடியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திற்கு இந்தியாவின் அனைத்து மக்கள் நலனில் அக்கறை இல்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சட்டம் இயற்றுவது என்ன வெறும் சடங்கா? என்று கேள்வியெழுப்பியுள்ள பார்வதி இந்த சட்டம் சுற்றுச்சூழலையும் காடுகளையும் அழித்து மனித உரிமைகளை கேலி செய்யும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார் .