
நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவிற்கு பலவித இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட பார்த்திபன், தேர்தலுக்கு வாக்களிக்க வரவில்லை. இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையால் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார்.
தற்போது கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாம் டோஸ் போட்டு கொண்ட பார்த்திபன் அதனால் தனக்கு காய்ச்சல், உடம்பு வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, என் அன்பு மகள் கீர்த்தனா இத்த’தகவலை’ பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. but ஜூரம், உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி! என பதிவு செய்துள்ளார்.
[youtube-feed feed=1]