சென்னை:
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினருக்கு, வரும் 15இ 16 ஆகிய 2 நாட்கள் விருப்ப விநியோகிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிகத்தில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு இடங்களில் போட்டியிடும். மதிமுக, ஐயூஎம்எல், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் கட்சி தலா ஒரு இடங்களில் போட்டியிடுகிறது.. மீதமுள்ள 20 இடங்களில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. ஒரே தொகுதியை பலர் கேட்பதால், யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசனை நீடித்து வருகிறது.
தொகுதிகள் அனைத்தும் சுமூகமாக ஒதுக்கப்பட்டு, எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் விவரமும் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினருக்கு, வரும் 15இ 16 ஆகிய 2 நாட்கள் விருப்ப விநியோகிக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.