சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைமை ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு, தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுக்கை அமைத்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. இதையொட்டி, கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி ஒதுக்கீட, வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் அறிக்கை, பிரசார வியூகங்கள் தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், திமுக தலைமைக்கழகம் சார்பில், கட்சியின் பொதுச்செயலாளர் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து அறிவித்து உள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு,  நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு’ குழு  அறிவிக்கப்பட்டு உள்ள.

திமுக எம்.பி.  கனிமொழி தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக கனிமொழி எம்.பி.யும், அவருக்கு உதவியாக  திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன்,  அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  டி.ஆர்.ப. இராஜா,  கோவி.செழியன், கேஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ, எம்எம்.அப்துல்லா எம்.பி, எழிலன் எம்எல்ஏ மற்றும் சென்னை மாநகரா மேயர் பிரியா பெயரும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயார் செய்வதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான குழுவை அமைத்து திமுக அறிவித்துள்ளது. இதற்கு தலைமை பொறுப்பாக அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருடன் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளனர்.

அதுபோல கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திடும் வகையில் திமுக  டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.  அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, இரா.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி. ஆ.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.