டில்லி :
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரசிலும் குழுக்கள் அமைத்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
நாடு முழுவதும் இன்னும் ஓரிருமாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்ட நிலையில், தேர்தல் குறித்து குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை அமைத்து காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
இக்குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் அய்யர், குஷ்பு உள்பட பலர் உள்ளனர்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
35 பேர் கொண்ட தேர்தல் பிரசார குழுவுக்கு திருநாவுக்கரசர் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்பு குழுவுக்கு பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகிப்பார் எனவும் காங்., கமிட்டி தெரிவித்துள்ளது.
தமிழக காங்., கமிட்டியின் செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.