புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
download
பாராளுமன்றத்தின்  குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 18ந் தேதி தொடங்கியது.  இந்த கூட்டத் தொடரில்தான் வரலாற்று சிறப்புமிக்க பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
10ஆண்டுகளாக இழுபறியாக இருந்த ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக உயர்த்தி வழங்க ஆவன செய்யும் மசோதா, குழந்தைகளுக்கும் கட்டாய ஹெல்மெட் போன்ற திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்றைய கடைசி நாள் விவாதத்தில்  காஷ்மீரில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக  பரபரப்பான விவாதம் நடைபெற்றது.
அங்கு வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்பு, சட்டம்-ஒழுங்கு  நிலமை,  நீடித்துவரும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக கவலை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறுதியில் பேசிய பாராளுமன்ற சபாநாயகர் சுமத்ரா மகாஜன்,  கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததாகவும், தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைப்பதாகவும்  அறிவித்தார். அதேபோல், மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.