டெல்லி: சென்னை, தூத்துக்குடி உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதி காரம் வழங்கும் மசோதா பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது.
நாட்டின் பொதுச்சொத்துக்களையும், பெரு நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்த்து வரும் மோடி அரசு ஏற்கனவே பல துறைமுகங்களை அதானி போன்ற பெறு நிறுவனங்களிடம் தாரை வார்த்துள்ள நிலையில், தற்போது முக்கிய 12 துறைமுகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
குஜராத், ஒடிசா, விசாகப்பட்டினம், மும்பை, மேற்கு வங்கம், சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கோவா உட்பட நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களுக்கு முடிவெடுப்பதில் அதிக சுயாட்சியை வழங்கவும், பலகைகளை அமைப்பதன் மூலம் அவர்களின் நிர்வாகத்தை நிபுணத்துவம் பெறவும் வகையிலான மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு செப்டம்பர் 23 அன்று நிறைவேற்றப் பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 44 வாங்குகளும் கிடைத்தன. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவை தாக்கல் செய்து பேசிய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இது முக்கிய துறைமுகங்களை தனியார்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும், தனியார் துறைமுகங்களுடன் போட்டியிடுவதற்காக அவர்களின் முடிவெடுக்கும் அதிகாரங்களை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் கூறினார்.
இந்த மசோதா இந்தியாவின் முக்கிய துறைமுகங்களை ஒழுங்குபடுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் திட்டமிடுதல் மற்றும் அத்தகைய துறைமுகங்களின் நிர்வாகம், கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றை முக்கிய துறைமுக அதிகாரிகளின் பலகைகள் மீது வழங்குவதோடு, அதனுடன் தொடர்புடைய அல்லது தற்செயலான விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சில உறுப்பினர்கள், இதன் காரணமாக துறைமுகங்கள் பாழாகிவிடும் என்றனர். ஆனால், அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த அமைச்சர், அது உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களாக மாறும் என்றும், வாரியம் தாங்களாகவே முடிவெடுக்க உதவும் என்றும் கூறினார்.
அதன்படி, இந்தியாவில் 12 முக்கிய துறைமுகங்கள் உள்ளன – தீண்டயால் (முந்தைய காண்ட்லா), மும்பை, ஜேஎன்பிடி, மர்முகாவ், புதிய மங்களூர், கொச்சின், சென்னை காமராஜர் (முந்தைய எண்ணூர்), வி ஓ சிதம்பர்னார் (தூத்துக்குடி) , விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் கொல்கத்தா (ஹால்டியா உட்பட) இவை அனைத்தும் சேர்ந்து 2019-20 ஆம் ஆண்டில் 705 மில்லியன் டன் (எம்டி) சரக்குகளை கையாண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மசோதா குறித்து மத்திய துறைமுகம் மற்றும் நீர்வழி போக்குவரத்துத் துறை அமைச் சர் மன்சுக் மாண்டவியா கூறும் போது, இந்த மசோதா மூலம் 12 துறைமுகங் களும் இனி சுதந்திரமான இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படும். தொழில்முறை நிர்வாகிகள் மூலம் இந்த துறைமுகங்களை நிர்வகிக்கவும் வழியேற்பட்டுள்ளது.
”துறைமுகங்கள் விரை வாக முடிவுகளை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகச் சிறப்பான துறை முகங்களாக இவற்றை வளர்த் தெடுக்க இயக்குநர் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இரு சபைகளிலும் இந்த மசோதா நிறைவேறி உள்ளதால், குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டதுடன் விரைவில் அமலுக்கும் வரும்.