டெல்லி: ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வடமாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையையொட்டி, நாடாளுமன்ற இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வருகிற 17ம் தேதி முதல் (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ) தொடர்ச்சியாக 4 நாட்கள்மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் இயங்காது என்று குடியரசு துணை தலைவரும், ராஜ்ய சபா சபாநாயகருமான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.