
டில்லி,
டில்லியில் நேற்று நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சிதம்பரம், பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமே இல்லை என்று கூறினார்.
பாராளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து, பாராளு மன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் சிலர் ஆதரவும் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், மத்திய அரசோ, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக சட்டசபை தேர்தல் நடத்துவதால் செலவு அதிகமாவதாகவும், அதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே பாராளுமன்றத்துக்கும், சட்டமன்ற மத்திய அரசுக்கு செலவு அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடைமுறையை கொண்டு வரலாம் மத்திய பாஜக அரசு கூறி வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமே இல்லை என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் எழுதிய ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டு பவர்’ என்ற புத்தகத்தை டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம்,
தற்போதைய அரசியல் சாசன சட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைக ளுக்கும் தேர்தல் நடத்த முடியாது. அதற்கான அதிகாரத்தை அரசியல் சட்டம் வழங்கவில்லை என்றார்.
மேலும், நாட்டில் உள்ள 30 மாநிலங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஜனநாயக ரீதியாக சாத்தியம் இல்லை என்றும், ஒரே தேசம், ஒரே வரி என்பது வெற்று அறிவிப்பாக போய்விட்டது. அதுபோலவே, தற்போது பாஜக கூறியுள்ள ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதும் வெற்று கூச்சலாகவே இருக்க போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்..
[youtube-feed feed=1]