சென்னை:  ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, பல ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கான முறையான அனுமதி கொடுக்கப்படாத நிலையில்,  பெரம்பூர் உள்பட  24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றில் 700-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தும் ஒப்பந்ததாரர்கள் மூலம் பயணிகளின் வாகனங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் பல்வேறு ரயில் நிலையங்கள் உள்பட  பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தங்களில் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்டது. பல இடங்களில் வாகன நிறுத்தங்களுக்கான புதிய ஒப்பந்ததாரர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியா மல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அதனால், தங்களது வாகனங்களுக்கு பாதுகாப்பு தேவை என கூறி, விரைவில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து சென்னை பெரம்பூர், கொரட்டுர் உள்பட  24 ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியைமீண்டும்  கொண்டு  வருவதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கி உள்ளது.

இதுகுறித்து கூறிய  தெற்கு ரயில்வே அதிகாரிகள் , சென்னையில்   பெரும்பாலான ரயில் நிலையங்களில் வாகன நிறுத்த வசதியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஒப்பந்ததாரர்கள்  படிப்படியாக  தேர்வு செய்யப்பட்டு நியமனன்ம செய்யப்படுவார்கள். முதல்கட்டமாக சென்னை,. கோட்டூர்புரம், செவ்வாய்ப்பேட்டை சாலை, கொருக்குப்பேட்டை சரக்கு கொட்டகை, மதுராந்தகம்,  அரக்கோணம், பரங்கிமலை, திண்டிவனம், தடா, தரமணி, காட்பாடி உட்பட 24 இடங்களில் வாகனநிறுத்த வசதிக்கான ஒப்பந்ததாரர் களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள்  முடிவடைந்து விரைவில்   பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர்.