ஐதராபாத்
பதினெட்டு வயது நிரம்பாத தங்கள் குழந்தைகளை வாகனம் ஓட்ட அனுமதித்தற்காக 10 பெற்றோர்களுக்கு ஐதராபாத் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்துள்ளது.
18 வயதுக்குட்பட சிறுவர்கள்/சிறுமியர்கள் வாகனம் ஓட்டுவது சட்டப்படி தண்டனைகுரிய குற்றமாகும். எனினும் அவர்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வது சகஜமாகி வருகிறது. மேலும் பெற்றொர்களே அதை ஊக்குவிப்பதாகவும் சொல்லப் படுகிறது.
இந்நிலையில் ஐதராபாத் நகரில் கடந்த மாதம் மட்டும் சிறுவர்கள் வாகனத்தை இயக்கியதாக 1079 வழக்குகள் பதியப்பட்டன. இதற்காக பெற்றோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாகனம் ஓட்டியதாக 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
அந்த 10 பேரின் பெற்றோர்களுக்கும் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த தண்டனை மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு உண்டாகும் என கூறி உள்ளார். அத்துடன் பெற்றோர்களுக்கு ரூ. 500 அபராதமும், சிறுவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு ஒரு நாள் அனுப்பி வைக்கவும் தீர்ப்பில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.