நெட்டிசன்:
சமீபத்தில், தனது “ரெமோ” படத்தின் நிகழ்ச்சியில் மேடையிலேயே  நடிகர் கார்த்திகேயன் அழ… அது குறித்து “தந்தி டிவி”யில், நிகழ்ச்சி நடத்தினார் ரங்கராஜ்பாண்டே.
இது குறித்த அறிவிப்பை பேஸ்புக்கில் பாண்டே வெளியிட, நெட்டிசன்கள் வெளியிட்ட கடுமையான விமர்சன பின்னூட்டங்கள் சில…
k-copy
Periyar Thanjai : பாண்டே அண்ணே…. அடுத்தவார நிகழ்ச்சிக்கு இங்கன ஒருத்தன் சிக்கியிருக்கான்…. எங்க வூட்டுக்கு எதிர்த்தாப்புல மூணாப்பு படிக்கிற பையன் கண்ணுல ஜலம் வச்சுண்டு இருக்கான்…. வந்து என்னான்னு கேளுண்ணே….
Mohamed Faris : என்கிட்ட இதுவரைக்கும் ஒரு கார் கூட இல்ல  😭 😭 😭 😭என்னையும் பேட்டி எடுங்க பாண்டே ஜி…!!  
Ra Ja : 30 வயது சிவகார்த்திகேயன் சினிமாவில் தனக்கு நடக்கும் கொடுமைகளுக்கு அழுது கொண்டிருக்கும் போது, 90 வயது தோழர் நல்லகண்ணு காவிரியில் மணல் குவாரிக்கு எதிராக போராடி சிரித்தபடி கைதாகி செல்கிறார்…… சிவ கார்த்திகேயனுக்காக கவலைப்படும் சமூகம் நல்லகன்னுவை பற்றி கவலைப்படுவதில்லை……..
Pravin Das : சிவகார்த்திகேயன் நீங்கள் சென்னைல மழை பெய்யும் போது நீங்கள் அழவில்லை உங்களுக்கு ஒரு பிரச்சனைனா என் அழகிறீர்கள்? தமிழ்நாட்ல முட்டாள்கள் இருக்கானு நீங்கள் நடிக்கிற்களா உங்களுக்கா நாங்கள் வருத்தப்பட மாட்டோம் நீங்கள் ஒரு கூத்தாடி என்பதை மீண்டும் நீருபித்துள்ளீர்.
Mohamed Inshaf : விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று அழுதாரா? மக்கள் கஷ்டத்தை கண்டு அழுதாரா ?
சினிமா துறையில் இருக்கும் ஒருவருக்கு கார் இல்லை என்று அழுகிறார். இதுல்லாம் ஒரு முக்கிய பிரச்சனையா…..?
Mohamed Rabeek: அவரு கண்கலங்கினா அது அவரோட தனிப்பட்ட விசயம்.ஒரு வியாபாரம் செய்தால் அதில் பல எதிரிகளும்,துரோகிகளும் நம்முடன் பயணம் செய்வார்கள்.அவர்களோடு சென்று அவர்களை வென்று சாதித்து காட்டவேண்டும்,போட்டிபோட முடியவில்லையென்றால் விலகிவிடவேண்டுமே தவிர இப்படி…   
துளசி நாயக்கர்: வாய்ல நல்லா வருது
ப்ரடியூசருக்கு கார் இல்லைனு சொல்லி அழுது பில்டப் பன்றது கேவலமா தெரியலயா?
அப்டி என்னத்த நாட்டு மக்களுக்கு நல்லத சொல்ற படத்த சிவகார்த்தியும் ப்ரடியூசரும் இயக்குனரும் சேர்ந்து எடுத்து கிழிச்சிட்டாங்க?
என்னமோ உலகத்துல இவங்க மட்டும் தான் உழைச்சு கிழிச்சசா மாதிரியும் மீதிபேரு சும்மா இருக்குற மாதிரியும் பில்டப் பபன்னிகிட்டு திரியுரானுக
மீடியா காரங்க இதல்லாம் ஒரு பிரச்சனைனு எடுப்பு வேலை பாக்குறதும்..   விஜயகாந்த் ஸ்டைல்ல துப்ப தோனுது
Ravi Shangaran: நாட்டுல எவ்வளவு பிரச்சனை இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு ஒரு சினமா நடிகன் அழுதான் என்பதற்காக ஒரு நிகழ்ச்சி வைக்கிறீர்களே. வெட்ககேடு. ஒரு வேளை உணவு இல்லாமல் எத்தனை மக்கள் அழுகிறார்கள். அவர்களை கூட்டிவந்து கேளுங்கள் உங்கள் அழுகைக்கு யார் காரணம் என்று?? அதற்கு துப்பில்லை. ஒரு சினிமா நடிகன் அழுதான் என்பதை தூக்கி பிடிக்கிறீர்கள்.
Sudhakar Chandra : இதையும் சேர்த்து சொல்லுங்க…. நடிகருடன் “கேள்விக்கேன்ன பதில்”.. முகநூலில் போட்டவுடன் … விழுந்த 45 (கமேண்டும்) பேரும் கேவலமா திட்டினாங்க…. பட் நான் கடமையே கண்ணா இருந்து சமூக பணி ஆத்துறேன்னு….
Silambarasan Annamalai : எல்லாரும் தங்களின் பிரச்சனைகளை தெருவுக்கு கொண்டுவந்தா என்ன ஆகும்…? பொதுப் பிரச்சனைக்காக இவர் தெருவுக்கு என்றாவது வந்துள்ளாரா…..? கஷ்டபட்டு உயர உயர நிறைய பிரச்சனையும் கூடவே வளரும்னு அவருக்கு தெரியாதா….? பாண்டே அண்ணே இத போல பேட்டிய நீங்க avoid பண்ணிருக்கலாம்.!
Nagarajan Kk: பினாமி பெயர்ல ஒரு குப்பை படத்தை தயாரித்து நடித்து(!), அதே மிக பெரிய அளவில் விநியோகம் பன்னிவிட்டு, நாளைக்கு ஏதாவது நஷ்டம் என்று பிரச்சனை வரும் என்று நீலி கண்ணீர் வடிக்கிறார்…!  அந்த ஆளுக்கு  மேடையில் அழுவது புதுசா??? அதற்கு நீ ஏன் சொம்பு தூக்கிட்டு போற….???
நெல்லை கனி ஜமாலி: மிஸ்டர் பூண்டே தினமும் என்னுடைய 3 வயது மகன் கார் வேணும்னு அழுவுறான்..என்ன பண்ண?
மீடியா என்ற மைக்கை கையில வச்சுகிட்டு எதையாச்சும் அழுவுறதா
கோவர்த்தனன் கணபதி:  யோவ்.. நல்லா வருவீங்கய்யா நாட்ல விவாதம் பன்ன எத்தனையோ வாழ்வாதார விசயங்கள் இருக்கு. உங்களுக்கு ஒரு சினிமா நடிகன் அழுதது பெருசா போச்சு …? தமிழ்நாடு உருப்புடும்…. மீடியா நல்லா வேலை பார்க்கறீங்க…. உங்கள பார்த்து துப்பறதுல என்ன தப்பு???????
Haja Nawaz:  தேவையற்ற விவாதங்கள் , பாஜக அரசின் காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினைகளும், தமிழக அரசின் மெத்தன போக்குகள் ஏராளமாக இருக்கின்ற போது சிவகார்த்திகேயன் அழுத செய்திகளுக்கு முக்கியத்துவம் தரணுமா? Rangaraj pandey அவர்களே
Venkatachalam M S:  பிரபலமானவங்க அழுதா விவாதமேடை நடத்துரீங்க இந்த மாதிரி நடுத்தர மக்கள் கோடிகணக்கானபேர் அழுராங்க
Siva Raman: பாண்டே சார், இந்த நிகழ்ச்சி நடத்தாமல் பழைய ஏதாவது நிகழ்ச்சியை கூட நீங்கள் ஒளிபரப்பி இருந்திருக்கலாம்.
on Subramaniya Kviyaselvan: ரெமொ போன்ற கீழ்த்தரமான படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன் கூட பேட்டியா..??!
தரம் தாழ்ந்தாரா பாண்டே???
Raajesh Arun :  ஏன் பாஸ் சசிகலாபுஷ்பா பேட்டியை மறு ஒலிபரப்பு செய்யலை???? பயந்துட்டியா கொமாரு…
மதுரை மணிமாறன்: திரு பாண்டே அவர்களே,
உங்கள் திறமைகளை உங்கள் அறிவாற்றள்களை சமூக வளமைக்கு பயன்படுத்துங்கள் 
இது வேண்டாம்
Sathish Kumar Sathishkumar : உலகத்திலயே ஒரு நடிகர் கண் கலங்கினால் அவரை அழைத்து ஊடகத்தில் அவர் கண்கலங்கியதற்க்கு யார் காரணம் என்று கேட்பது தந்தியில் தான் இருக்கும்.
Cnk Nasir:  எங்க அக்கா மகன் காலைல இருந்து அழுதுட்டே இருக்கான்… 
என்னன்னு தெரியல….. கேளுங்க பாண்டே!
Murali Munisamy: சிவகார்த்திகேயன் படத்த 150 ரூபா செலவு பண்ணி பாக்குற மக்களுக்கு சோத்துக்கு கூட வழி இல்ல பாண்டே.
KN Radha Krishnan: வருத்தப்படாத வாலிபர்சங்கமெ வருத்தத்தில் இருந்தாலும் உங்க தொழில் ஓகொ தான் பாண்டே!
Bunyamin Sathik: ஏங்க இப்படி பாண்டேவை எல்லோரும் வச்சி செய்கிறீர்கள். இந்த அசிங்கம் தேவையா Mr. பாண்டே…….!