நெட்டிசன்:
விஜயகுமார் ஜெயராஜ் (Vijaykumar Jeyaraj) அவர்களது முகநூல் பதிவு:
தமிழக முதல்வர் அவர்கள் மருத்துவமனையில் செய்தித்தாள் படிப்பதாக சமூக வலைதளங்களில் வலம் வரும் போட்டோஷாப் படத்தின் உண்மை படம் இதுதான். அப்படத்தை image search- இல் போட்டால் similar images என்ற பட்டியலில் கூகுள் எளிதில் உண்மையைப் போட்டு உடைத்துவிடும்.

ஒரிஜினல்
ஒரிஜினல்

இது தெரியாமல் பலரும் இதை ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு அரைக்குறை போட்டோஷாப் டிசைனர் செய்த வேலை இது என்பதை படத்தில் முதல்வரின் கழுத்துப்பகுதியில் நிற வேற்றுமையைப் பார்த்தாலே சொல்லிவிடலாம்.
அதுமட்டுமன்றி தினசரி செய்தித்தாள் படிப்பதாக வேறு எழுதப்பட்டிருக்கிறது. எந்த பத்திரிக்கை நாளிதழை இவ்வளவு
போட்டோ ஷாப்
போட்டோ ஷாப்

பெரிய புத்தக வடிவில் வெளியிடுகிறது என்பது தெரியவில்லை. கொஞ்சமாவது காமன் சென்ஸ் வேண்டாமா?
முதல்வர் பூரண நலம் பெற்று மறுபடி திரும்பி வரவேண்டும் என்று மனதார பிரார்த்திப்போம். தேவையற்ற வதந்திகளை பரப்புவதையும் அதை ஊக்கப்படுத்துவதையும் தவிருங்கள்.