நெட்டிசன் பகுதி:
Saravanan K  அவர்களின் முகநூல் பதிவு:
பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவின் பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பானது. பாண்டே பேட்டிகண்டார்.
Untitled

 பாண்டே: நீங்கள் காட்டை அழித்து ஆசிரமம் கட்டியதாக சொல்லப்படுகிறதே?
 ஜக்கி: நாங்கள் வருவதற்கு முன் இங்கு மூன்றே மூன்று மரங்கள் மட்டுமே இருந்தன. ஒருபோதும் இது காடு கிடையாது.
பாண்டே:உங்கள் மீது தவறு இல்லை என்றால் யார் உங்கள் மீது இக்குற்றச் சாட்டுகளை சுமத்துகின்றனர்.
ஜக்கி: இங்கு சிலர் காட்டுப் பன்றி ,நரிகளை வேட்டையாடுவர். நாங்கள் வந்த பிறகு அது முடியாமல் போனது.. அவர்கள் தான் எங்கள் மீது இப்படி குற்றம் சுமத்துகின்றனர் .
 # “காடே இல்லாத இடத்தில் எப்படி காட்டுப் பன்றியும் நரிகளும் இருந்தன?”  என்று பாண்டே கேட்பார் என்று எதிர்பார்த்தேன். ஏனோ கேட்வில்லை.