இஸ்லாமாபாத்,
பாக். பிரதமர் நவாஸ் ஷெரிப் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளதாக பனாமா பேப்பர் செய்தி நிறுவனம் ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் பிரதமர் நவாசுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.
உலகில் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள், பிரபலமானவர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவதையும், கருப்பு பணம் பதுக்கி வைப்பதையும் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது பனாமா பேப்பர்ஸ் நிறுவனம்.
அதுபோல் சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் குடும்பத்தினர் வெளிநாடுகளில் சொத்து குவித்துள்ளதாக பரரப்பான செய்தியை ஆவணங்களுடன் வெளியிட்டது.
இதைவைத்து, முன்னாள் கிரக்கெட் வீரரும், இந்நாள் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, வெளிநாட்டில் சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்தாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ள தாக பனாமா பேப்பர் செய்தி நிறுவனம் ஆவணம் வெளியிட்டு இருந்தது.
இந்த விசாரணை தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி, மற்றும் இஜாசுல் ஆசன், கில்ஜி ஆரிப் ஹுசைன் ஆகியோர் அடங்கிய முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மர்யம், மகன்கள் ஹசன், ஹூசேன், மருமகன் முகமத் சப்தார், நிதி மந்திரி ஈசாக் தார் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் ஜெனரல், அட்டார்னி ஜெனரல் உள்ளிட்டோருக்கு நீதிபதிகள் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“ நவாஸ் ஷெரீப் ராஜா போல் வாழ்ந்து வருகிறார், அவரை சட்டத்திற்கு முன் நிறுத்துவது அவசியம். நாட்டு மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட பல விவகாரங்கள் இந்த வழக்கின் மூலம் வெளிவரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.