பாலஸ்தீன பிரதமர் முகம்மது ஷ்டய்யே தனது பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்துள்ளார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பாலஸ்தீன பிரதமரின் இந்த முடிவு மேற்கு கரையிலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 30000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் 1200 இஸ்ரேலியர்களும் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.

பாலஸ்தீனர்கள் அனைவரையும் வெளியேற்றுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல் படை இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில் பாலத்தீனத்தில் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனால் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே முகம்மது ஷ்டய்யே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அவருக்கு பதிலாக பாலஸ்தீன முதலீட்டு நிதியத்தின் தலைவர் முகமத் முஸ்தபா அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது.