ப்போது எங்கும் பேலியோ டயட் என்றே பேச்சு. உடலைப் பேண இதுவே சரியான முறை என்ற நம்பிக்கை  பரவியிருக்கிறது. இந்த நிலையில் பேலியோ முறையை நடைமுறைப்படுத்துவதில் முன்னணியில் இருப்பவர்களுக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக பரபரப்பு எழுந்திருக்கிறது.
பேலியோவுக்கான பேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான லியாண்டர் செல்வன், “எங்களுக்கு மிரட்டல் வந்திருப்பதால் பேலியோ பேஸ்புக் பக்கத்தை தொடரப்போவதில்லை” என்று சில நாட்களுக்கு முன் பதிவிட்டது பேலியோ பாலோயர்ஸ் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை.

நியாண்டர் செல்வன்
நியாண்டர் செல்வன்

இந்த நிலையில் நியாண்டர் செல்வனை தொடர்புகொண்டு பேலியோ குறித்து கேட்டோம்.
அவர் நமக்களித்த பதில்:
“பேலியோவுக்கு பெருவாரியான மக்களின் ஆதரவு இருக்கிறது. ஆனால் சிலர் அதை எதிர்த்து கொன்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தீவிர சைவர்கள். அசைவம் உண்பது பாவம் என நம்புவதால் பேலியோவை எதிர்க்கிறார்கள். சிலர் கொழுப்பு உண்பது ஆபத்து என நம்புவதால் எதிர்க்கிறார்கள்.முகநூல் அரசியல் காரணமாக எதிர்ப்பவர்களும் உண்டு. சிலரது வணிகம் இதனால் பாதிக்கபட்டதால் அவர்களும் எதிர்க்கிறார்கள். இப்படி சில எதிரிகள் உருவாக என்ன காரணம் என தெரியவில்லை. இவர்களில் முகமறியாத சிலரது அச்சுறுத்தல்கள், நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு வந்த ஆதாரபூர்வமான தகவல்களால் தான் கன்சல்டிங்கை சிறிது காலம் நிறுத்தி வைக்கும் சூழல் உருவானது.
.இந்த இடைகாலத்தில் குழுவில் உள்ள மக்களின் டயட் கதைகளை எழுத கோரினோம். குழும வலைதள வேலைகளை முடுக்கிவிட்டோம். வலைதளம் தயார் ஆனால் கன்சல்டிங் செய்வதில் சிக்கல் இருக்காது என நம்புகிறோம். ஊடகங்கள், தமிழ்முகநூல் சமூக ஆதரவு ஆகியவை முழுமையாக கிடைத்தன. அதனால் மீண்டும் டயட் கன்சல்டிங்கை படிப்படியாக துவக்கிவருகிறோம். இப்போது சர்க்கரை நோயாளிகள், இதயநோயாளிகள் ஆகியோருக்கு டயட் கன்சல்டிங் செய்கிறோம். மற்றவர்களுக்கும் சேவையை விரிவுபடுத்துவோம்.
அதீத உடல்பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ரவற்றில் பாதிப்படைந்து மீண்டவர்களுக்கு பேலியோ நிச்சயம் ஒரு வாழ்வியல் முறையே ஆகும். அவர்கள் அதன்பின் வழக்கமான உணவுகளுக்கு திரும்பினால் அவர்களை விட்டுபோன நோய்கள் மீண்டும் வந்து சேரும். அதனால் போதுமான எடையை அடைந்தபின் மெய்ன்டெனெஸ் டயட் என்ற பெயரில் ஒரு எல்லைக்குள் கார்ப்ஸ், ப்ழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை உண்டு, மாதம் ஓரிரு நாள் அரிசி உண்ணலாம் என அனுமதிக்கிறோம். ஆனால் கோதுமை, இனிப்புகள், பேக்கரி பொருட்கள் போன்றவற்றை திருவிழா, பண்டிகை சமயம் மிக அரிதாக மட்டுமே எடுக்கவேண்டும். தொடர்ந்து தினம் இவற்றை உண்டுவந்தால் போனவியாதிகள் திரும்பவந்துவிடும்
 
3
பேலியோவின் வளர்ச்சிக்கு ஊடகங்களும், முகநூல் தமிழ் சமூகமும் அளித்த வரவேற்பு மிக முக்கிய பங்கை ஆற்றியது. துவக்கம் முதலே மல்லிகை மகள், தினமணி ஆகிய ஊடகங்கள் எனக்கு கட்டுரை எழுத வாய்ப்பளித்தன. தினமணியில் வந்த கட்டுரைதொடர் பேலியோ டய்ட நூலாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்தது. விகடன் குழுமம், தினகரன் வசந்தம், தினகரன் நாளிதழ், குங்குமம் டாக்டர் ஆகியவையும், சன்டிவி,ம் சேனல் 18 ஆகியவையும், புதிய தலைமுறை போன்ற ஊடகங்களும் பேலியோவை மக்களிடையே கொண்டுசென்றன. இந்த கட்டுரைகள் வெளிவந்த அடுத்தடுத்த நாட்களில் ஆயிரகணக்கானோர் குழுவில் சேர்ந்தார்கள்.
கேபிள் சங்கர் பேலியோ டயட்டை பற்றி எழுதிய பதிவுக்கு அடுத்த நாள் குழுவில் 2000 பேர் சேர்ந்தார்கள். ஜாக்க்கிசேகர் எழுதிய பின் 400 பேர் சேர்ந்தார்கள். பாத்திமா பாபு போன்ற பிரபலங்கள் தம் முகநூல் பக்கம், ட்விட்டரில் எழுதியபின் ஆயிரகணக்கனோர் அடுத்தட்த்த நாட்களில் குழுவில் சேர்ந்தார்கள். முகநூல் தமிழ்சமூகத்தின் இந்த ரீச் என்னை மிகுந்த வியப்படைய செய்கிறது. தமிழ்முகநூல் சமூகம் தமிழ் சமுதாயத்திற்கு அளித்த கொடை பேலியோ எனில் அது மிகையல்ல. ஊடகங்கள் மற்றும் தமிழ்முகநூல் சமூகத்திற்கு எங்கள் நன்றி
a
முகநூல் குழுபக்கம் குழப்பகரமானது. பிரைவசி அதில் இல்லை. முகநூலே பிரைவசிக்கு மிக மோசமானது என்பதை அறிவோம். இதில் வந்த ஒரு சிக்கல் அனைவரின் ரிபோர்ட்டும் பகிரங்கமாக பகிரபடுவது. துவக்கத்தில் ரிபோர்ட்டுகளை பெறும் எண்ணமே இல்லை. ஆனால் இன்று குழுமம் வளர, வளர குழுமம் ரிபோர்ட்டுகளால் நிரம்புகிறது. தனியாக ஒரு வலைதளம் துவக்கி குழும டைம்லைனை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வலைதளம் தயாரானதும் ரிபோர்ட்டுகள் பகிரங்கம் ஆகாது. பிரைவசி காக்கப்படும்
. மருத்துவர்களை இணைத்து மதுரையில் பிப்ரவரியில் கருத்தரங்கு ஒன்று நிகழ்த்த ஏற்பாடுகள் மதுரை கல்லூரி ஒன்றின்மூலம் நடந்து வருகின்றன. மருத்துவர் அருண்குமார் குழுவில் உள்ள மக்களிடம் சர்வே ஒன்றை எடுத்து ஆய்வு ஒன்றை நிகழ்த்தி மெடிக்கல் ஜர்னலில் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஸ்டாடின் குறித்து மருத்துவர் ஹரிஹரன் எழுதிய பதிவுகள் முகநூலில் வைரலாக பரவின. மருத்துவர் ப்ரூனோ சென்னை பேலியோ டாக்டர் என்ற பெயரில் வலைதளம் திறந்து பேலியோ விழிப்புணர்வு பதிவுகளை எழுதி வருகிறார். பேலியோ கன்சல்டிங் செய்யும் மருத்துவர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.
b
தமிழக மருத்துவர்கள் பேலியோவுக்கு அளிக்கும் வரவேற்பு உலகில் வேறு எந்த நாட்டிலும் காணமுடியாத ஒன்று. ஏனெனில் அரசின் டயட் கைடுலைன்களை கேள்விக்குள்ளாக்காமல் ஏற்றுத்தான் இத்தனை விபரீதங்கள் பெருகின. வியாதிகள் பரவின. தமிழக மருத்துவர்கள் அதை கேள்விக்குளாக்கியிருப்பது ஒரு மருத்துவ புரட்சி என்றே கூறவேன்டும். பேலியோவின் மூலம் பல ஆய்வுகள், முயற்சிகளை தமிழக மருத்துவர்கள் முன்னெடுப்பார்க்ச்ள் என உறுதியாக் நம்புகிறேன்” என்று நம்மிடம் தெரிவித்தார் லியாண்டர் செல்வன்.
மிரட்டல் குறித்த மேலதிக தகவல்கள் குறித்தும் கேட்டிருக்கிறோம். விரைவில் அதற்கான விளக்கம் பேலியோ முன்னோடிகளிடமிருந்து வரும். அதையும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.