ஜனநாயக கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கினிண்டனுக்கு கடும் போட்டியாக இருந்த பெர்னீ சாண்டர்ஸ் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் பற்றி சமூகவலைதளத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதை 134,000 பேர் பகிர்ந்துள்ளனர்.

berne

அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு:
“அரசியல், பொருளாதாரம் மற்றும் ஊடகங்களின் செயல்பாடுகளால் முழுவதும் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் தங்கள் கோபத்தினூடாக டொனால்டு ட்ரம்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். நம் நாட்டில் மக்கள் கடினமாக உழைத்தும் அதற்கான பலனை அனுபவிக்க இயலாமல் சீனா முதலான குறைந்த வருமானமுள்ள நாடுகளுக்கு சென்று அங்காவது நிம்மதியாக வாழமுடியுமா, என்று ஏங்கும் நிலையில் மக்கள் இருக்கிறார்கள். பணக்காரர்களே மேலும் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்கள் தங்கள் குழந்தைகளை நல்ல கல்லூரிகளில் படிக்கவைக்கக் கூட இயலாத நெருக்கடியில் உள்ளனர்.
இது போன்ற சூழலில் இந்நாட்டு மக்களை முன்னேற்றும் நல்ல முயற்சியில் அதிபராக பதவியேற்கவிருக்கும் ட்ரம்ப் ஈடுபடுவாரானால் அவருக்கு எல்லாவிதத்திலும் நாங்கள் துணை நிற்ப்போம். அல்லது தனது வழக்கமான இனவெறி, பாலியல், அந்நியர் வெறுப்பு அரசியலை தொடர்வாரானால் அவரை நாங்கள் மிகக் கடுமையாக எதிர்ப்போம்” என்று பெர்னீ சாண்டர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.