திண்டுக்கல்: பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோவிலில்  வரும் 29ந்தேதி கொடியேறுகிறது. தொடர்ந்து மார்ச் 7ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது.

தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விழாக்களில் ஒன்று பங்குனி உத்திரமும் ஒன்று.  தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது பங்குனி. அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது உத்திரம். இவை இரண்டு இணைந்து வரும் நாளையே பங்குனி உத்திரமாக கொண்டாடுகிறோம்.

பங்குனி உத்திரம் விழா அனைத்து முருகன் மற்றும் சிவன்கோவில்கள் மற்றும் அய்யனார் போன்ற காவல்தெய்வம் குடிகொண்டிருக்கும் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், பழனி முருகன்கோவிலில் வெகுசிறப்பாக பங்குனி உத்திரம் திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. சூரர்களை வென்றபின் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளன்று தெய்வானையை முருகன் திருமணம் செய்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா வரும் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  வருகிற 29-ந்தேதி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி,  மலைக்கோவிலில் உச்சிகாலத்தில் காப்பு கட்டு நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி தினசரி தந்தப்பல்லக்கில், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருவுலாவும், இரவில் வெள்ளியாலான காமதேனு, ஆட்டுக்கிடா, யானை மற்றும் தங்கமயில், தங்கக்குதிரை போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.

திருவிழாவின் 6-ம் நாளான வருகிற ஏப்ரல் 3-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், வெள்ளிரதத்தில் வீதி உலா நடக்கிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 4-ந்தேதி மாலை கிரிவீதியில் நடைபெறுகிறது.

ஏப்ரல் 7-ந்தேதி கொடியிறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பங்குனி உத்திரம் திருவிழாவுக்கான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  பழனி தண்டாயுதப்பாணி கோவிலின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட பணிகளுக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கோவிலுக்கு  நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்  வந்து செல்வதால், அந்த பகுதியில் ஏற்படும்  போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் கூட்டம் அதிகரிப்பால் கடுமையான இடநெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி முதற்கட்டமாக பழனி கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறபடுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக 58 ஏக்கர் தனியார் நிலங்களை கையகப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணி திட்டமிடப்பட்டது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகள் நிலங்களை அளவீடு செய்து, எல்கைகளை வரையறுக்கும் பணியினை கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தொடங்கினர்.

சிறப்புப்பெற்ற நன்னாளான பங்குனி உத்திரம் இந்த 2023-ம் (Panguni Uthiram 2023) ஆண்டு மார்ச் 22 அன்று வருகிறது. எனவே அந்நாளில் சிவாலயம் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுங்கள் நன்றி வணக்கம்.

பழனி பங்குனி உத்திர விழா விபரம் :

மார்ச் 29 – கொடியேற்றம்
மார்ச் 30 – வெள்ளி காமதேனு வாகனம்
மார்ச் 31 – வெள்ளி ஆட்டு கிடா வாகனம்
ஏப்ரல் 01 – தங்கமயில் வாகனம்
ஏப்ரல் 02 – யானை வாகனம்
ஏப்ரல் 03 – திருக்கல்யாணம் – வெள்ளி ரத ஊர்வலம்

ஏப்ரல் 04 – தேரோட்டம்
ஏப்ரல் 05 – தங்க குதிரை வாகனம்
ஏப்ரல் 06 – வெள்ளிபிடரி மயில் வாகனம்
ஏப்ரல் 07 – கொடி இறக்குதல்