சென்னை: தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை குறித்து கட்சியின் உயர்தலைவர்களுடன் விவாதிக்க, மாநில பாஜக தலைவர் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அதுபோல, கவர்னர் ஆர்.என்.ரவி அலுவலக விசயமாக டெல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது சர்ச்சையானது. இதற்கிடையில், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்தியஅரசு, ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்த மாநில அரசு சட்டம் இயற்ற உரிமை உண்டு என்று தெரிவித்து உள்ளது. ஆனால்,  இது தொடர்பான முழு அதிகாரம் மத்தியஅரசுக்கே உள்ளது என்றும், நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதல்படிதான் ஒழுங்குபடுத்த முடியும் என தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டு வரப்படுகிறது. இதனால், தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது.

இநத் நிலையில், ஆளுநர் அவசரமாக 2 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் சில அமைச்சர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுபோல, மாநலி பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செல்கிறார். ஏற்கனவே வருகிற 26ம் தேதி பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களை  சந்திக்க இருந்த நிலையில், முன்கூட்டியே சந்திக்கும் வகையில் இன்று டெல்லி செல்கிறார். அங்கு  பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்கிறார்.

அதிமுக கூட்டணி தேவையில்லை என அண்ணாமலை கூறியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.