சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேசம் ஜனவரி மாதம் 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (27ந்தேதி) திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கோவிலில் கடந்த 16 ஆண்டுகளாக கும்பாபிஷேசம் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் 27ந்தேதி கும்பாபிஷேசம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த டிசம்பர் மாதம் 25ஆம் தேதி முகூர்த்தக் கால் நடப்பட்டு ஜனவரி 18 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜை நடைபெற்று வருகிறது.
வரும் 26ம் தேதி பழனி மலைக் கோவில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு ஜனவரி கும்பாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாளான 27ந்தேதி, பழநி தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தமிழில் நடைபெற உள்ள இந்த கும்பாபிஷேசகம் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்பவர்களுக்கான டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில் 27ந்தேதி திண்டுக்கல் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.