டெல்லி:

துபாயில் இருந்து இந்தியா வந்த பாகிஸ்தான் பயணி ‘‘ தான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்’’ என கூறியதால் விமானநிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று வந்தது. இதில் பயணம் செய்து வந்து இறங்கிய பாகிஸ்தான் பயணி ஒருவர் விமானநிலைய உதவி மையத்திற்கு சென்றார்.

அங்கு பணயில் பெண்ணிடம் , ” நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்’’ என்று தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ. என்பது பாகிஸ்தான் உளவு அமைப்பாகும். ‘‘ஐ.எஸ்.ஐ. பற்றிய தகவல்களை கூற விரும்புகிறேன்” என்றார்.

இதனால் பீதியடைந்த அந்த பெண் ஊழியர் இது குறித்து பாதுகாப்பு பிரிவு அதிகரிகளுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவரது பெயர் முகமது அகமது ஷேக் முகமது ரபிக். வயது 38 என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், ‘‘ நான் ஐ.எஸ்.ஐ.யில் இருந்து விலகிவிட்டு, இந்தியாவில் தங்கி இருக்க விரும்புகிறேன்” என அதிகாரிகளிடம் அவர் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயணியை ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர் சொல்வது உண்மையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.