லாகூர்:

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பள்ளி நிகழ்ச்சிகளில் நடனம் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நடனம் ஆடுவது மத நெறிகளில் இருந்து விலகி இருப்பதால் இது ஒழுக்க கேடான செயல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘நடனம் ஆடுவது அல்லது ஒழுக்க கேடான செயல்பாட்டில் மாணவ மாணவிகளை பள்ளிகள் ஈடுபடுட செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும். இது மதத்துக்கு எதிரானதாகும். இதை மீறும் ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களில் தலைவர்கள் நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகள், பெற்றோர் தினம், ஆசிரியர் தினம் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய பாடல்களுக்கு மாணவ மாணவிகள் நடனம் ஆடும் நடைமுறை உள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் தான் நடனம் ஆடக் கூடாது என்று அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு மாகாணத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும். மாவட்ட கல்வி அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.