இஸ்லாமாபாத்
நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானில் 6472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடெங்கும் பரவி வருகிறது. பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளன. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
நேற்று பாகிஸ்தானில் ஒரே நாளில் 6472 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டு மொத்த எண்ணிக்கை 1,32,405 ஆகி உள்ளது. நேற்று 88 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணமடைந்தோர் எண்ணிக்கை 2551 ஆக உயர்ந்துள்ளது இதுவரை 50,056 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
பாதிப்பு எண்ணிக்கையில் பாகிஸ்தான் 15 ஆம் இடத்தில் உள்ளது.
இதுவரை பாகிஸ்தானில் 8,39,019 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 50,087 பேரும் அதற்கு அடுத்தபடியாக சிந்து மாகாணத்தில் 49,256 பேரும் உள்ளதாக பாகிஸ்தான் அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.