லண்டன்: இங்கிலாந்திற்கு எதிரான டி-20 தொடரை சமன் செய்தது பாகிஸ்தான். இறுதி டி-20 போட்டியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

டாஸ் வென்று பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது இங்கிலாந்து. இதனடிப்படையில், களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், ஹைதர் அலி 33 பந்துகளில் 54 ரன்களும், முகமது ஹபீஸ் 52 பந்துகளில் 86 ரன்களும் வெளுத்தனர். முகமது ஹபீஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. பாபர் ஆஸம் 21 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இறுதியில், 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், டாம் பேன்டன் 46 ரன்களும், மொயீன் அலி 61 ரன்களும் அடித்தர். மற்ற பேட்ஸ்மென்கள் சோபிக்கவில்லை. இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களையே எடுத்தது இங்கிலாந்து.

பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதன்மூலம், இந்த டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது. முதல் போட்டி மழை காரணமாக தடைப்பட்டது.

[youtube-feed feed=1]