ஸ்ரீநகர்:

மீப காலமாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் உதவியுடன் பயங்கரவாதிகளும்  இந்திய ராணுவ முகாம் மீது அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபதில் ஜம்முவில் சன்ஞ்வான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த இந்திய ராணுவத்தினர், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், , பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகம்மது பய ங்யகரவாதிகள் 4 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இவர்களில் 3 பேர்  கொல்லப்பட்டு விட்டனர்.  ஒருவரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது என்றார்.

மேலும், பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றும் கூறினார்.