
லண்டன்: இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி, மைதானத்தில் ஈரப்பதம் காரணமாக தடைபட்டுள்ளது.
ஃபாலோ ஆன் பெற்று, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி, 100 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில், ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தடைபட்டுள்ளது.
இன்று இறுதிநாள் ஆட்டம் என்பதால், நிலைமை தொடர்ந்து அப்படியே நீடிக்கும்பட்சத்தில், இந்த ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்படும். துவக்க வீரர் ஷான் மசூத் இந்த ஆட்டத்திலாவது மீண்டும் நன்றாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 18 ரன்களுக்கு அவுட்டானார்.
அபிட் அலி 42 ரன்களுக்கு அவுட்டானார். ஆஸர் அலி 29 ரன்களுடனும், பாபர் ஆஸம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து தரப்பில், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்த தொடர் முழுவதும் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]