ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் டாலரில் வர்த்தகம் செய்வதை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆயினும் ரஷ்யாவுடன் பாகிஸ்தானின் எண்ணெய் தொடர்பான வர்த்தகம் சீன நாட்டின் நாணயமான யுவானில் உள்ளது.

ரஷியா கடந்த வாரம் பாகிஸ்தானுக்கு அதன் மூலம் கச்சா எண்ணெய் வழங்கியது. நட்பு நாணயங்களில் செலுத்திய பணம் மூலம் பாகிஸ்தானுக்கு எண்ணெய் வழங்கத் தொடங்கியதாக ரஷ்ய  எரிசக்தித் துறை அமைச்சர் நிகோலாய் ஷுல்கினோவ் கூறினார்.

ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளில் பல்வேறு நாணயங்களைப் பயன்படுத்தவும், இரு தரப்பு வர்த்தகத்தில் டாலரின் பங்கைக் குறைக்கவும் பாகிஸ்தான் தயாராக உள்ளது என அந்த நாட்டின் வர்த்தக அமைச்சர் சையது நவீத் கமர் தெரிவித்துள்ளார்.

பண்டமாற்று முறையைத் தொடங்குவதன் மூலம் வெளிநாட்டு நாணயங்களை நம்பியிருப்பதைக் குறைக்க முடியும் எனவும் அவர் கூறி உள்ளார்.