ஸ்லாம்பாத்

ந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களின் மிகவும் அபிமானத்தைப் பெற்ற போட்டிகளில் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் இடத்தில் உள்ளது.   இன்று இந்த போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த அணி அக்டோபர் 24 அன்று தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவுடன் போட்டியிட உள்ளது.,

இந்த பாபர் அசாம் தலைமையிலான அணியில் சோயிப் மாலிக், சர்பராஸ் அகமது, வஹாப் ரியாஸ், முகமது அமீர் ஆகிய மூத்த வீரர்கள் இடம் பெறவில்லை. மேலும் தொடக்க வீரர் சர்ஜீல் கான், ஆல்ரவுண்டர் பஹீம் அஷ்ரம் ஆகியோரும் தேர்வாகவில்லை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகிய இருவரும் 20 ஓவர்  உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 20 ஓவர் தொடர்களில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்

பாகிஸ்தான் அணியில்

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோயிப் மக்சூட், அசாம் கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷாஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ராப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.  

ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.