ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அரசு வரும் 11 ஆம் தேதி வரை பன்னாட்டு விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இந்தியா மீது பாகிஸ்தான் தீவிரவாத இயக்கம் நடத்திய புல்வாமா தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் விமானப்படையை துரத்திச் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

பாலகோட் தாக்குதலை ஒட்டி கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் பன்னாட்டு விமான போக்குவரத்து சேவையை நிறுத்தி வைத்தது. நாட்டில் போர் அபாயம் உள்ளதால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.   இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பா பயனிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வர இருந்த நிலையில் பாகிஸ்தான் விமான போக்குவர்த்து துறை அமைச்சகம் இதை மேலும் நீட்டித்துள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையின்படி பன்னாட்டு விமான போக்குவரத்து சேவை வரும் 11 ஆம் தேதி மாலை 3 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.