பாகிஸ்தானை சேர்ந்த கடத்தல்காரன் சுமார் 2.5 மில்லியன் மதிப்புள்ள இந்திய கள்ள நோட்டுக்களுடன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான்.
இந்தியாவும், சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொண்டதால் இந்த குற்றத்தை கண்டுபிடித்து குற்றவாளியை கைது செய்வது சாத்தியமாகியிருக்கிறது. பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ.2.5 மில்லியன் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை ஃபைஸ் முகமது என்ற நபர் சீனாவின் ஹாங்சோவ் பகுதியில் பதுக்கி வைத்திருந்ததாக கண்டறியப்பட்டு அந்த நபர் கைது செய்யபட்டிருக்கிறார்.
இந்தியாவும் சீனாவும் 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களுக்குள் பயங்கரவாத மற்றும் கிரிமினல் குற்றங்கள் தொடர்பான புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்வதென ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.