வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பல்வேறு போட்டிகளில் ஆடச்சென்றசென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் விளையாட பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. அதன்படி போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டியில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
நியூசிலாந்து பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்துக்கு அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு அங்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பார்க் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், அவர்களுக்கு தொற்று குணமடையும் வரை, அவர்கள் பயிற்சிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கொரோனா நேர்மறையான சோதனைக காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட முதல் நாளில் பாகிஸ்தான் அணியின் சில வீரர்கள், கொரோனா நெறிமுறைகளை மீறியதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் புகார் தெரிவித்துள்ளது.
மேலும், “சர்வதேச அணிகளை நடத்துவதில் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது என்று என்று கருதுவதாகவும், நாட்டின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்து உள்ளது.