இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன்செய்ய வேண்டுமானால், தென்னாப்பிரிக்க அணி 370 ரன்களை எட்ட வேண்டும். தனது இரண்டாவது இன்னிங்ஸில் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான்.

முதல் டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் வென்றுவிட்ட நிலையில், இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றால்தான் தொடர் சமன் ஆகும். இல்லையேல், ஒயிட்வாஷ் ஆகும் நிலை ஏற்படும்.

இரண்டாவது இன்னிங்ஸில், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 115 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட்டாகாமல் இருந்தார். அதற்குடுத்த அதிகபட்ச ரன்களாக நெளமன் அலி 45 ரன்களை சேர்த்தார்.

தென்னாப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லிண்டேவுக்கு 5 விக்கெட்டுகள் கிடைத்தன.

முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கே சுருண்ட தென்னாப்பிரிக்கா, தற்போது 1 நாளைக்கும் மேலாக ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், 370 ரன்களை எட்டுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

 

[youtube-feed feed=1]