லாகூர்:

பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோவிலை புதுப்பித்து கொடுக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் கைபர் பாக்த்துன்க்வாவின் இந்து கோவில் கடந்த மத வெறியர்களால் கடந்த 1977ம் ஆண்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜவாத் கவாஜா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

‘‘கராக் மாவட்டத்தில் உள்ள பரம்ஷன்ஸ் ஜி மகாராஜ்வின் நினைவிடத்தை புதுப்பித்து கட்டுவதற்கான புதிய திட்டதுடன் கைபர் பாக்த்துன்க்வா முன்வரவேண்டும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். ‘‘இந்த கோவிலை எவ்வளவு செலவானாலும் புதுப்பித்து கட்டிக் கொடுக்கு வகையில் கட்டட வடிவமைப்பாளரை மாகாண அரசாங்கம் நியமனம் செய்ய வேண்டும்.

இதற்கு கராக் துணை கமிஷனர் சோயிப் ஜதூன் மற்றும் மாகான உள்துறை செயலாளர் அர்பாப் முகமது ஆரிப் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக இந்த கோவிலை பகுதி மட்டும் புதுப்பித்து கொ டுத்ததற்கு நீதிமன்றம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் மற்றும் உள்ளூர் மத தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கோவில் அழிக்கப்பட்டது. கட ந்த ஆண்டு ஏப்ரலில் இந்த கோவிலை புதுப்பித்து கொடுக்க கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோவிலை சுற்றி காம்பவுண்ட் சுவரை மட்டுமே கட்டிக் கொடுக்கப்பட்டது. இதன் மீதான மேல்முறையீட்டில் தான் உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

‘‘காம்பவுண்ட் சுவர் மட்டும் கட்டி கொடுத்தது போதுமானதாக இல்லை. புது கட்டடமே கட்டி கொடுக்க வேண்டும். லாகூர் ஷகால் சந்தையில் உள்ள கோவில் எப்படி கட்டட வடிவமைப்பாளர் கமில்கான் மூலம் புதுப்பிக்கப்பட்டதோ, அதுபோது இதையும் புதுப்பித்து கட்டிக் கொடுக்க வேண்டும். இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வரும் செப்டம்பர் 7ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’’ என்று துணை கமிஷனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, ராமர் கோவிலை கட்டும் முயற்சியில் இந்துத்வா அமைப்புகள் ஆர்வம்காட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு பலரது வரவேற்ப்பை பெற்றுள்ளது.