இஸ்லாமாபாத்:

தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்வது தொடர்பாக ரஷ்யா-பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையிலான 2 வார கால கூட்டு பயிற்சி ரஷ்யா மில்ரால்னேயில் நடக்கிறது.

இதன் தொடக்க விழாவில் இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ளுதல், பிணைய கைதிகளை மீட்பது உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் குறித்து இருநாட்டு வீரர்களும் பயிற்சி பெறவுள்ளனர்.

இந்த கூட்டு பயிற்சியின் மூலம் இரு நாடுகள் இடையிலான ராணுவ உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக பாகிஸ்தான்-அமெரிக்கா இடையிலான உறவு சுமூகமாக இருந்ததால் இரு நாடுகளின் ராணுவ ரீதியிலான உறவில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால், தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால் பாகிஸ்தான், தற்போது ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.