சண்டிகர்:

பலாத்கார சாமியார் குர்மீத் சிங் சிறைத் தண்டனையை எதிர்த்து உயர்பீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இரு பெண் சீடர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து ரோதக் மாவட்டத்தில் உள்ள சிறையில் சாமியார் அடைக்கப்பட்டார். முன்னதாக இந்த வழக்கில் சாமியார் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டபோது ஹரியானா, பஞ்சாப், டில்லியில் கலவரம் வெடித்தது. பின்னர் துணை ராணுவப்படையினர் தீவிரமாக செயல்பட்டு வன்முறையை அடக்கினர்.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து குர்மீத் சிங் சார்பில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ‘‘பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்களின் வாக்குமூலங்களை 6 ஆண்டுகள் தாமதத்துக்கு பிறகுதான் சி.பி.ஐ. பதிவு செய்தது.

வாக்குமூலத்தின் சில பகுதிகளை மறைத்து விட்டது. இதுபோன்ற தவறுகள் இருப்பதால் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.