இஸ்லாமாபாத்: 
பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த 8 லட்சத்து 78 ஆயிரத்து 740 பேர் உள்பட  மொத்தமாக  எண்ணிக்கை 9 லட்சத்து 42 ஆயிரத்து 189-ஆக உயர்ந்துள்ளது.
மொத்தமாக கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையான 41 ஆயிரத்து 726 பேரில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 30 நாட்களில் பாதிப்புக்குள்ளானவர்களாகும்.
மேலும் அந்த அறிக்கையில், நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா தொற்று பரவலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக உள்ளதுடன், மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 723-ஆக உள்ளது.
பாகிஸ்தானின் அதிகளவு கொரோனா பாதிப்புக்குள்ளான மாகாணங்களில் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முதலிடத்தில் உள்ளது.  இந்த மாகாணத்தில் 3  லட்சத்து 44 ஆயிரத்து 65 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன், 10 ஆயிரத்து 516 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து தெற்கு சிந்து மாகாணத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 184 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதுடன், 5 ஆயிரத்து 243 பேர் உயிரிழந்துள்ளனர்.