பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா செல்ல இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிப். 23-24 ஆகிய இரண்டு நாட்கள் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இம்ரான் கான் ரஷ்யா அதிபர் புட்டினையும் சந்திக்க இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

1999 ம் ஆண்டு நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்த போது ரஷ்யா சென்றார் இதன் பின் கடந்த 23 ஆண்டுகளாக எந்தவொரு பாகிஸ்தான் பிரதமரும் ரஷ்யா செல்லவில்லை.
உக்ரைன் விவகாரம் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளை கவலையடயைச் செய்திருக்கும் வேலையில், பாகிஸ்தான் பிரதமர் ரஷ்யா செல்ல இருப்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel