லாகூர்

ழல்  வழக்கில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் விடுதலை செய்யபடுள்ளர்.

பஞ்சாப் மாகாண முதல்வராக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பதவி வகித்து வந்தார்.  அவர் கடந்த 2018-ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார்.

இதனால் சுமார் ரூ.6 கோடி வரை மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.  ஆயினும் இந்த வழக்கின் விசாரணை லாகூர் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் வழக்கை வாபஸ் பெறுவதாக புகார்தாரர் அறிவித்தார்.

எனவே இந்த ஊழல் வழக்கில் இருந்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெரீப் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.