இஸ்லாமாபாத்
சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் பொருள் ஈட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.
சீனாவில் கழுதைகளுக்கு நல்ல விலை கொடுக்கப்படுகிறது. பல சீன மருந்துகளில் கழுதையின் தோல் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக கழுதையின் தோலினால் செய்யப்பட்ட தோலாடையில் பல மருத்துவ குணங்கள் உள்ளதாக சீனாவில் கூறப்படுகிறது. இதன் மூலம் இரத்தம் சுத்திகரிக்கப்படுவதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் சீனர்கள் நம்புகின்றனர்.
பாகிஸ்தானில் கழுதைகள் அதிக அளவில் உள்ளன. உலகில் அதிக கழுதைகள் உள்ள நாடுகளில் பாகிஸ்தான் மூன்றாம் இடத்தில் உள்ளது. தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் பொருளாதார நிலையில் கடும் பின்னடைவில் உள்ளது.
சீனா கழுதைகள் தொகையில் முதல் இடத்தில் இருந்த போதிலும் அந்த விலங்குகள் அந்நாட்டுக்கு மேலும் மேலும் தேவைப்படுகிறத
எனவே வர்த்தகத்தையும் பொருளாதாரத்தையும் முன்னேற்ற பாகிஸ்தான் கழுதைகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதுவரை பாகிஸ்தான் 80000 கழுதைகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்றுமதிக்கு சீன நிறுவனங்கள் ஒப்பந்தம் அளித்துள்ளதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் கழுதைப் பண்ணைகள் அமைக்க உள்ளன.
இதற்காக அந்நிறுவனங்கள் பாகிஸ்தானில் 300 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய உள்ளன. இந்நிறுவனங்களுடன் இணைந்து பாகிஸ்தான் நிறுவனங்கள் மனேச்வ்ரா மற்றும் டேரா இஸ்மாயில் கான் ஆகிய இரு இடங்களில் கழுதைப் பண்ணைகள் தொடங்க உள்ளன