லண்டன்: ஜுன் 29ம் தேதி வரையான நிலவரப்படி, ஆஸ்திரேலிய அணி 8 போட்டிகளில் விளையாடி, 14 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.
இந்திய அணி, 6 போட்டிகள் மட்டுமே விளையாடி, 11 புள்ளிகளுடன் இரண்டாமிடம் வகிக்கிறது. நியூசிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி, 11 புள்ளிகளுடன் மூன்றாமிடம் வகிக்கிறது.
அதேசமயம், முதல் 4 இடங்களில் நீண்டநாட்களாக மாற்றம் ஏற்பட்டிராத நிலையில், நேற்று 4ம் இடத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆஃப்கானிஸ்தானை வென்றதன் மூலம் 9 புள்ளிகளைப் பெற்று, இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி, நான்காம் இடத்தில் வந்தமர்ந்தது பாகிஸ்தான். வெறும் 8 புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்த இங்கிலாந்து 5ம் இடத்திற்கு சென்றுவிட்டது.
வங்கதேசம் 7 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், இலங்கை 6 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் 8வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் 3 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ஆஃப்கானிஸ்தான் எந்தப் புள்ளியுமின்றி கடைசி இடத்திலும் உள்ளன.