ஸ்லாமாபாத்

லங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.  தற்போது பாகிஸ்தானிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.   பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது.

மக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பெருமளவிலான மக்கள் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  ஆகவே பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.