ஸ்லாமாபாத்

டந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹஃபிஸ் சையது வின் ஜமாத் உத் தவா இயக்கத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டு நடத்திய ஹஃபீஸ் சையது தீவிரவாத இயக்கமான ஜமாத் உத் தவா வின் தலைவர் ஆவார்.    இந்த இயக்கத்தின் தொண்டு நிறுவனமான ஃபலா ஈ இன்சானியத் என்னும் அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார்.

கடந்த வருடம் நடந்த பாகிஸ்தான்  பொதுத் தேர்தலில்  இவருடைய அமைப்பின் கட்சியான அல்லாஹு அக்பர் தகரீக் போட்டியிட்டது.   இந்த கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தை ஹஃபீஸ் சையது முன்னின்று நடத்தினார்.   இந்த கட்சி 80 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மாநிலங்களிலும் போட்டியிட்டது.   ஆனால்  ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

நேற்று பாகிஸ்தான்பிரதமர் அலுவலகத்தில் அந்நாட்டு தேசிய பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நடந்தது.   அப்போது இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல விவகாரங்கள் விவாதிக்கபட்டுள்ளன.    இந்த கூட்டத்தின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் “நாட்டின் உள்துறை அமைச்சகம் ஹமாத் உத் தவா மற்றும் அதன் தொண்டு நிறுவனம் ஃபலா ஈ இன்சானியத் ஆகியவற்றை கண்காணித்து வந்துள்ளது.   இந்த இரு இயக்கங்களையும் தற்போது உள்துறை  அமைச்சகம் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக அறிவித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.