ஸ்பாட் பிக்சிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஜில்கானுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மீண்டும் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் அதிரடி கிரிக்கெட் வீரர் சர்ஜில்கான். இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார். இடையில் ஸ்பாட் பிக்ஸில் ஈடுபட்டதாக சர்ஜில்கான் இரண்டரை ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
பிறகு மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் இவர் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரிக்க லாகூர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசாட் ஹைதர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிந்து இந்த குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சர்ஜில்கான் (மறுபடி) ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதற்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தது. இதையடுத்து சர்ஜில்கான் 5 ஆண்டுகள் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.