ம்மு

காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய இரு பாக் வீரர்கள்  கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி  காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.   மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது.   மாநிலத்தில் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.  இந்த விவகாரத்தில் இந்தியாவுக்குப் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  காஷ்மீரில்  உள்ள ஹாஜிபுர் செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.  இதற்கு இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.  இதில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.    இந்த தாக்குதலில் இரு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்

கொல்லப்பட்ட இருவீரர்களின் உடலை எடுத்துச் செல்ல பாகிஸ்தான் ராணுவம் முன்வந்தது.   அமைதி முறைப்படி வெள்ளைக் கொடியுடன் வந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இறந்து போன தங்கள் நாட்டு வீரர்கள் இருவரின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர்.   வெள்ளைக் கொடி ஏந்தி வருவோர் யார் மீதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதும் அவர்களையும் யாரும் தாக்கக் கூடாது என்பதும் போர் விதிகளில் ஒன்றாகும்.