பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

Must read

புதுடெல்லி: 
பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்பதால்,  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று கூறினார்.
பஞ்சாபின் ரஹிம்யார் கான் நகரில் வசிப்பவர் ஆலம் ராம் பீல், அவரது மனைவி உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு வயலில் பச்சைப் பருப்பை விவசாயம் செய்கிறார்.  இந்நிலையில்,  பீல், குடும்பம் ஒரு குழாயிலிருந்து குடிநீர் எடுக்க அருகில் உள்ள மசூதிக்கு வெளியே சென்றபோது, சில உள்ளூர் நில உரிமையாளர்கள் அவர்களை அடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ராம் பீல் குடும்பத்தினர் தாங்கள் பறித்த பருத்தியை இறக்கிவிட்டு குடும்பம் வீடு திரும்பும் போது, நில உரிமையாளர்கள் அவர்களை தங்கள் தேராவில் (அவுட்ஹவுஸ்) பிணைக் கைதிகளாகப் பிடித்து மசூதியின் புனிதத்தை மீறியதற்காக மீண்டும் சித்திரவதை செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்பதால் காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று பீல் கூறினார்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞரும் முன்னாள் மாவட்ட பார் தலைவருமான பரூக் ரிந்த்,  குற்றம் சாட்டப்பட்ட நில உரிமையாளர்கள் சிறிய பிரச்சினைகளுக்காக மற்ற கிராம மக்களுடன் சண்டையிடுவதில் இழிவானவர்கள் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இலவச சட்ட உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார்.
பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மை சமூகத்தினராக இருந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, பாகிஸ்தானில் 75 லட்சம் இந்துக்கள் வாழ்கின்றனர். இருப்பினும், சமூகத்தின் படி, 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் நாட்டில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article