டல்லாஸ் விமான நிலையத்தில் தவித்த இந்திய மாணவர்களுக்கு நிதிஉதவி செய்த  பாகிஸ்தான் தொழிலதிபர் !

INDO-PAK 1

இந்தியா பாகிஸ்தான் இடையே அரசியல் மோதல்கள் வெடிக்கும் இந்த வேளையில், நெஞ்சைத் தொடும் ஓரு   இந்திய-பாகிஸ்தான் நல்லிணக்கச் சம்பவம் அயல்நாட்டில் நடைபெற்றது.

இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு  பல ஆண்டுகளாக  கசப்பான இருந்து வந்தாலும், நல்லியல்பு மற்றும் நட்பு தனிப்பட்ட கதைகள் பெரும்பாலும் இந்திய-பாகிஸ்தான் பகைக்கதையை  உடைத்து,அவ்வப்பொழுது வெளிப்படும்.

 இந்திய மாணவர்கள் குழு ஒன்று  அதிக எடை மற்றும் அளவிலான  “விமான மாடல்”எடுத்துச் செல்ல அபராதக் கட்டணம் செலுத்த முடியாமல் ஒரு அமெரிக்க விமான நிலையத்தில் தவிக்கும் போது, அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் தொழிலதிபர், இந்திய  மாணவர்களுக்காக அந்த அபராதக் கட்டணத்தை கட்டி உதவிஉள்ளார். 

PAK BUSINESSMAN BAILSOUT NIT J STUDENTS

 தேசிய  தொழில்நுட்பக் கழகம்-ஜாம்ஷெட்பூர் (என்.ஐ.டி-ஜே)   இருந்து, ஏரோ-வடிவமைப்பாளர்கள் குழு டெக்சாஸில் உள்ள ஒரு போட்டியில் பங்கேற்ற பிறகு இந்தியா திரும்பும் போது டல்லாஸ் விமான நிலையத்தில் மார்ச் 16 ம் தேதி இந்தச் சம்பவம் நடைப்பெற்றதாகவும், பர்ன்வால் அமாத் எனத்  தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் தொழிலதிபர், விமான நிலைய அதிகாரிகள் கேட்ட தொகையான $ 260  (ரூ 17,000 ) அபராதமாக கட்டி உதவினார் என அணியின் தலைவர் ஆதித்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

“நாங்கள் இந்தியா வந்ததும், பணத்தை திருப்பித் தருகின்றோம் என அவரது வங்கிக்கணக்கு விவரம் கேட்ட பொழுது , பணத்தை திருப்பித்தர தேவை இல்லை என பெருந்தன்மையுடன் மறுத்துவிட்டார். ” என்றார் ஆதித்யா. அவர்கள் ஆறு மாதங்கள் உழைத்து 1.5 லட்சம் செலவில் இந்த குட்டி விமானத்தை உருவாக்கினர் என்பது குறிபிடத்தக்கது.