ஸ்ரீநகர்: பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என காஷ்மீர் மாநிலத் அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். இதுதொடர்பான ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளனர். இதற்கிடையில் என்ஐஏ 4 பயங்கரவாதிகளின் வரைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலமான பஹல்காம், மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள பைசரன் புல்வெளியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22, 2025) அன்று நடந்த பயங்கரவாதிகளின் வெறியாட்ட தாக்குதலில் குறைந்தது 28 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அப்போது அங்கு ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர், இதில் பலர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் நடந்த பைசரன் புல்வெளி பஹல்காம் ரிசார்ட் நகரத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தத் தாக்குதலால் காஷ்மீருக்கு வந்த சுற்றுலாப் பயணிகளும் அவசரமாக தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புகின்றனர். பயணிகளின் தேவைக்காக கூடுதல் விமானங்களும் இயக்கப்படுகின்றன.
தாக்குதல் நடத்தப்பட்ட இடம் காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி கள் குறித்து சிறு தகவல் அளிப்பவருக்கும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் போலீசார் அறிவித்துள்ளனர். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறையின் அறிவிப்பால் விரைவில் பயங்கரவாதிகள் விரைவில் பிடிபடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
